பிரித்தானியாவில் பிழைப்பது கடினம் என கூறப்பட்ட குழந்தையை, ஒரு தாயின் பாசம் காப்பற்றியுள்ள சம்பவம் மருத்துவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டி மாலிக் என்ற தாய், பிழைக்க முடியாது என கூறப்பட்ட குழந்தையை தன்னுடைய தாய் பாசத்தால் காப்பாற்றி மருத்துவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கிறிஸ்டி, தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த சுவாரஷ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2013ம் ஆண்டு 27 வார கர்ப்பத்தின்போதே எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட நேரம் என்னுடைய குழந்தையினை காப்பாற்ற முடியவில்லை. இதனால் நானும் என்னுடைய கணவர் Wajahat பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம்.
நான் மீண்டும் கர்ப்பமாக இருந்தபோது எங்கள் இருவருக்குமே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இரண்டாவதாக பிறக்க உள்ள குழந்தைக்கு, எந்த அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என நாங்கள் இருவருமே அடிக்கடி அதற்கான பரிசோதனைகளையும் மேற்கொண்டிருந்தோம்.
நான் கர்ப்பமடைந்த 23 வாரங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், திடீரென எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பித்தது. முதல் குழந்தைக்கு நேர்ந்ததை போல எதுவும் நடந்துவிடுமோ என்ற பயம் எனக்கு அதிகரித்துவிட்டது.
வேகமாக என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பொழுது எனக்கு பழைய ஞாபகம் அனைத்தும் சேர்த்து என்னை மிகவும் சோகமடைய வைத்தது.
அங்கு 1கிலோவிற்கும் குறைவான எடையில் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குறைமாதத்தில் பிறந்த குழந்தை 5 சதவிகிதம் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பு எனவும், அப்படியே உயிர் பிழைத்தாலும், ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
குழந்தை பிறந்த சில நிமிடங்கள் மட்டுமே நானும் என்னுடைய கணவரும் பார்த்தோம். அதன்பிறகு குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டதால் எங்களிடம் இருந்து பிரித்து, இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. ஒவ்வொரு நிமிடமும் நான் அவளை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே நடந்த அந்த துயர சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அடுத்த சில வாரங்களில் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் எங்களிடம் கூறினார்கள். லேசாக மூச்சுவிடவும், சாப்பிடவும் ஆரம்பித்தது. எனக்கு பெரும் நம்பிக்கை பிறந்து, என்னுடைய குழந்தையை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன்.
22 வாரங்களில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது. ஒருநாள் குழந்தையின் தலையில் கட்டி இருப்பதால், மூளை வாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவக்குழு எச்சரிக்கை விடுத்தது.
பின்னர் அதற்குதான் உரிய சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர்.
இப்படி பல துயரங்களை தாண்டி 21 மாத குழந்தையாக வளர்ந்திருக்கும் என்னுடைய மகள் அலி மாலிக், தற்போது கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக காத்திருக்கிறாள் என தெரிவித்துள்ளார்.