உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும். எடை அதிகமாக கூடினால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதனை எளிய முறையில் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
அதுவும் ஏலக்காயை வைத்து 14 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும் என்றால், நம்புவீர்களா..!? ஆனால், இதுதான் உண்மை. ஏலக்காயை வைத்து வெறும் 14 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும். வாங்க நண்பர்களே,எப்படினு இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆச்சரியமூட்டும் ஏலம்..!
ஏலக்காயை நாம் சமையலில் பயன்படுத்தம் அளவில் கூட அவற்றின் நன்மையை பற்றி நமக்கு தெரியாது. ஏலம் பலவித மருத்துவ குணங்களை கொண்டதாக பண்டைய காலத்திலே முன்னோர்கள் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். இதய நோய் முதல் தாம்பத்தியம் வரை ஏராளமான நலன்களை உடலுக்கு இது தருகிறதாம்.
ஏலக்காயில் இவ்வளவு ஊட்டச்சத்துக்களா..!
எண்ணற்ற தாதுக்கள், பல வகையான வைட்டமின்கள் நிறைந்தது இந்த ஏலம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதோ…
சோடியம் 18mg
பொட்டாசியம் 1,119mg
புரதம் 11g
கால்சியம் 0.38
வைட்டமின் சி 35%
இரும்புசத்து 77%
வைட்டமின் பி6 10%
மெக்னீசியம் 57%
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
ஏலக்காயில் அதிக அளவில் அண்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து இதய கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். குறிப்பாக இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்து எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் ஏலம் பார்த்து கொள்ளும்.
14 நாட்கள் டாஸ்க்..!
உங்கள் எடையை குறைக்க வெறும் 14 நாட்கள் போதுமாம். அதற்கு நீங்கள் சில முக்கியமானவற்றை செய்ய வேண்டும். நீங்கள் குடிக்கும் நீரில் இந்த ஏலக்காயை போட்டு கொள்ள வேண்டும். இந்த நீரையே தாகம் எடுக்கும் நேரங்களில் குடித்து வரவும்.
அதாவது ஏலக்காய் கலந்த நீரை உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்னும் குடித்து வர வேண்டும். கூடுதலாக நீங்கள் குடிக்கும் மில்ஷேக்கிலும், டீயிலும், உணவுகளிலும் இதே நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உங்களின் எடை குறையும்.
நீரிழிவை தடுக்கும் ஏல நீர்..! சர்க்கரை நோயை தடுக்க இந்த ஏலக்காய் கலந்த நீரை குடித்து வந்தாலே போதும். ஏனெனில், ஏலத்தில் ஒரு அற்புத மருத்துவ தன்மை உள்ளது. இதில் உள்ள மெகனீஸ் சர்க்கரையின் அளவை உடலில் அதிகமாகாமல் குறைத்து விடுமாம்.
தாம்பத்தியத்திற்கு உதவும் ஏலம்..! ஏலக்காயில் cineole என்ற முக்கிய மூல பொருள் உள்ளது. எனவே, நீங்கள் ஏல நீரை குடித்து வருவதன் மூலம் உங்களின் பாலுணர்வு அதிகரித்து இனிமையான தாம்பத்தியம் நடைபெறும். அத்துடன் ஏலக்காய் மலட்டு தன்மையையும் குணப்படுத்துமாம்.
எடை எவ்வளவு குறையும்..? தொடர்ந்து 14 நாட்கள் இந்த ஏலம் கலந்த நீரை குடித்து வந்தால் சுமார் 1 முதல் 2 கிலோ குறையுமாம். அத்துடன் உடல் வலிமையையும் இது அதிகரித்து விடுமாம். உடல் பருமனால் உடலில் ஏற்பட்டுள்ள சோர்வு, அலுப்பு போன்றவை முற்றிலுமாக நீங்கி விடும்.
செரிமானத்திற்கும் ஏலமே போதும்..! கண்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு அதனால் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்படுவோருக்கு ஏல நீர் சிறந்த மருந்தாகும். இது ஜீரண கோளாறுகளை முழுமையாக குணப்படுத்தி விடும். மேலும், ஜீரண மண்டலத்தில் ஏற்பட்டுள்ள புண்களுக்கும் ஏலக்காய் நல்ல மருந்தாம். எனவே, ஆரோக்கியமான உடல் நலத்தை பெறவும், அழகான கச்சிதமான உடல் எடையுடன் இருக்கவும் இனி இந்த சுவை மிக்க ஏலக்காய் நீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே போதும். இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.