ஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 4 பொட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் மற்றும் ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நிதானமாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 112 ரன்களை சேர்த்த நிலையில், 50 ரன்கள் எடுத்த நிலையில் பிஞ்ச் பூம்ரா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதையடுத்து களமிறங்கிய கவாஜாவை 5 ரன்களிலும், சிறப்பாக விளையாடிய ஹாரிஸ் 70 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது.  கேப்டன் டிம் பெய்ன்னும்(16) பேட் கம்மின்ஸும் (11) களத்தில் விளையாடி வருகின்றனர்.

தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டீம் பெய்ன் 38 ரன்களுக்கும், கம்மின்ஸ் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லயன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.  இந்தியா அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும், ஹனுமா விஹாரி, பூம்ரா, யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சோதனையாக முடிந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 12 பந்துகளை சந்தித்து ரன் எதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்ட் ஆனார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்.