மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் உயர்தர உணவு விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருவதாக உணவு மற்றும் மருந்தாக நிர்வாக துறையினருக்கு அதிகளவில் புகார்கள் கிடைத்தது.
தொடர்ச்சியாக கிடைத்த புகார்களை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். அந்த சமயத்தில் உணவு விடுதிகளுக்கு சென்ற அதிகாரிகள்., உணவகத்தின் சுத்த தன்மை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் சுகாதாரமான குடிநீர்., சுத்தமான கழிவறை., உணவு விடுதியில் பணியாற்றும் ஊழியர்களின் வயது மற்றும் அவர்களின் உடல் நலம்., உணவு விடுதிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் சரியான முறையில் பின்பற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில்., 442 உணவு விடுதிகளில் மேற்கொண்டு தரமற்ற நிலையில் உள்ள 327 உணவு விடுதிகளை கண்டறிந்தனர். அந்த உணவு விடுதிகளுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது.