கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹானூர் தாலுகாவிலுள்ள சுல்வாடியில் மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது. அதனையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த மக்கள், பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இந்நிலையில் பிரசாதத்தை சாப்பிட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பிரசாதம் சாப்பிட்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்துவிட்டது என்று ,முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 11 பேர் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்.