தமிழகம் முழுவதும், தற்போது, பெயர் தெரியாத நோய் கூட நம்மை எளிதாகத் தாக்குகிறது. அதன் பிடியிலிருந்து விடுபட, நாம் மருத்துவமனையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
என்ன தான், மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், கிரகங்களின் துணை இருந்தால் தான், அந்த சிகிச்சை வெற்றி பெறும். நல்ல பலன் அளிக்கும். அதனால் தான், படித்த மருத்துவர்களும், தெய்வத்தின் மீதும், கிரகங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகர் சரவணன், தற்போது பூரண குணம் அடைந்து விட்டார். அவர் இதற்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அவரது குடும்பத்தினர் சனி பகவானுக்கு தொடர்ந்து செய்த பூஜைகளின் பலனாக, அந்த மருத்துவம், அவரைக் குணப்படுத்தியது.
இன்று, சனிக்கிழமை, எந்தக் காரியம் செய்வதற்கு முன்பாகவும், சனி பகவானை வணங்கி விட்டு தொடங்குங்கள். முடிந்தால், அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று, சனி பகவானுக்கு, இரண்டு எள் விளக்கு போட்டு, வணங்கி வாருங்கள்.
இதனால், உங்களுக்கு வந்த நோயையும் இவர் குணப்படுத்துவார். எந்த நோயும் வர விடாமல் தடுப்பார்.
நோய்களுக்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலும், அதனை பலிக்க வைக்க, சனி பகவானின் கருணை அவசியம்!