விஜய் சேதுபதியுடன் 7வது முறையாக இணையும் நடிகை!

விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெற்றி படமாக அமைந்தது. அடுத்து அவர் நடித்த சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்து வருகிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதி சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

ஏற்கனவே நடிகை காயத்ரி, விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 7வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார். மேலும், இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.