சுரைக்காய் பாயசம்!! 5 நிமிடங்களில் செய்யலாம்!!

நீர் சத்து நிறைந்த சுரைக்காயை வைத்து செய்யப்படும் இந்த ரெசிபியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதுள்ள நார்ச்சத்து நமது சீரண மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது. குறைந்த கொழுப்பு சத்து கொண்டு இருப்பதால் இது நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 1/2(150 கிராம்)
தண்ணீர் – 2 கப்
நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
உடைத்த முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
கெவரா எஸன்ஸ் – 1 துளி

செய்முறை:

பாதி சுரைக்காயை வெட்டி தோலுரித்து கொள்ள வேண்டும். பிறகு, அதை நைசாக துருவிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுபடுத்தி, அதில்,துருவிய சுரைக்காயை போட்டு 2-3 நிமிடங்கள் சூடு படுத்த வேண்டும்.

தண்ணீரை வடிகட்டி சுரைக்காயை தனியாக எடுத்து, அடுப்பில் சூடான கடாயில் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதே நேரத்தில் அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி அதில், முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்னர், அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும். பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காய் பாத்திரத்தில் அதை எடுத்து ஊற்றவும். 5-6 நிமிடங்கள் சமைக்க வேண்டும். சர்க்கரையை சேர்த்து அது முழுமையாக கரையும் வரை சமைக்க வேண்டும். பிறகு அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் கெவரா எஸன்ஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

நன்றாக கலக்கி அடுப்பை அணைத்து விடவும். கப்பிற்கு மாற்றி பரிமாறவும். தேவை என்றால் இன்னும் மற்ற உலர்ந்த பழங்கள் சேர்த்து கொள்ளலாம்.