என்ன பரிசு கொடுத்தால் காதலிக்கு பிடிக்கும்!! இனி கன்பியூசன் வேண்டாம்!!

இன்றைய கால இளைஞர்கள் பலருக்கு மிகபெரிய சவாலாக இருக்கும் விஷயம் இந்த பரிசளிக்கும் விஷயம். ஆனால், பெண்கள் அதிகம் விரும்பி ஏற்பது இந்த ‘சர்ப்ரைஸ் கிப்ட்’ களை தான் என்கிறது ஆய்வு. பலபேர் காதலிக்கு அல்லது மனைவிக்கு பிறந்த நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இந்த பிறந்த நாள் பரிசை நினைத்து தலையை பிய்த்து கொள்வார்கள். பற்றாகுறைக்கு நண்பர்களையும் பாடாய் படுத்தி விடுவார்கள்.

இனி அந்த கவலை வேண்டாம். யாரிடமும் கேட்காமல் நீங்களே முடிவெடுக்கலாம். பின்வரும் உபயோகமான பொருட்களை பரிசளிக்கலாம். இதனால் அவர்களுக்கு உங்கள் மீது நன்மதிப்பு கிடைக்கும்.

கண் மசாஜர்

பெண்கள் தங்கள் கண்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவர். இத்தகையோருக்கு மிகவும் ஏற்றது கண் மசாஜர். கண்ணில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யும் இந்த மசாஜரை சிறிது நேரம் அணிந்தால் கண் புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கும். இதை அணிவதன் மூலம் தலைவலி போன்ற பிரச்சினையையும் தவிர்க்க முடியும். இது மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இதையும் பரிசளிக்கலாம்.

பரு நீக்கி (பிம்பிள் ஸாப்பர்)

இளம் பெண்களுக்கு மிகவும் உபயோகமானது. சருமத்தில் ஊடுருவி பரு உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். பருவினால் உண்டாகும் தழும்புகளை மறையச் செய்யும். பரிசளிக்கும் பெண்ணின் சருமத்துக்கேற்ற ஸாப்பரை வாங்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.

மொபைல் சார்ஜிங் பர்ஸ்

இன்றைய நவ நாகரிக யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத பெண்களே கிடையாது. ஸ்மார்ட்போன் மற்றும் அது சார்ந்த உதிரி பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அதேசமயம் மற்றவர்களின் பார்வைக்கும் அழகான தோற்றம் தருவது மொபைல் சார்ஜிங் பர்ஸ். ஸ்மார்ட்போன், சார்ஜிங் கேபிள் உள்ளிட்டவற்றை அழகாக வைக்க, இந்த வகை பர்ஸ் உதவும்.

சென்சார் கண்ணாடி

பெண்கள் அதிக நேரம் செலவழிப்பது கண்ணாடி முன்புதான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துவர். நவீன காலத்தில் பழைய கால முகம் பார்க்கும் கண்ணாடியை விட சென்சார் என்ற உணர் கருவி கொண்ட கண்ணாடி மிகவும் ஏற்றது. இத்தகைய சென்சார் கண்ணாடி பெரும்பாலான இணையதளங்களிலும் கிடைக்கிறது.

ஆல் இன் ஒன் ஹேர் ஸ்டைலர்

சிகை அலங்காரத்துக்கு மிகவும் ஏற்றது ஹேர் டிரையர் உள்ளிட்ட நவீன சாதனங் களாகும். அனைத்து வகை யான கூந்தல் பராமரிப்புக்கும் ஏற்ற ஹேர் ஸ்டைலரை வாங்கி பரிசளியுங்கள். இதை விரும்பாத பெண்கள் மிக மிகக் குறைவு.

இ-ரீடர்

வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை விட இ-ரீடர் எனப்படும் கிண்டில் போன்ற இ-புத்தகங்கள் மிகவும் சிறந்தது. இதுவும் பெண்களுக்கு பரிசளிக்க ஏற்றது. இதை எடுத்துச் செல்வதும் எளிது. விரும்பிய நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும்.

ஸ்மார்ட் வாட்ச்

நவீன பெண்களுக்கு நவீன கைக்கடிகாரம்தான் ஸ்மார்ட்வாட்ச். மிகவும் சிக்கலான, அதிக செயல்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களை விட, பெண்களுக்கு உதவும் வகையில், எளிய செயல்பாடு மூலம் சிறப்பாக இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கி பரிசளிக்கலாம். இதையும் பெண்கள் விரும்புவர்.

யுனிவர்சல் சார்ஜர்

நவ-நாகரிக பெண்கள் மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மிகவும் ஏற்றது. ஒரே சமயத்தில் பல மின்னணு சாதனங்களை சார்ஜ் ஏற்ற உதவும் வகையிலான யுனிவர்சல் சார்ஜரையும் பெண்களுக்கு பரிசாக அளிக்கலாம். வயர்லெஸ் சாதனமாக இருப்பின் இது மிகவும் சிறந்தது. இதில் மிகவும் சிறந்த பிராண்டுள்ள, விரைவாக சார்ஜ் ஏறக்கூடியதை வாங்கி பரிசளிக்கலாம்.

மேக் அப் பிரஷ்

பெரும்பாலும் விசேஷங்கள், வெளியூருக்கு பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. இத்தகைய பிரஷ்கள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பேட்டரியில் இயங்கும் பிரஷ், நேரத்தை மிச்சப்படுத்தும். இத்தகயை பிரஷ்கள் அனைத்து ஆன்லைன் இணையதளங்களிலும் கிடைக்கிறது.

இன்ஸ்டன்ட் கேமரா

எவ்வளவுதான் ஸ்மார்ட்போன் வந்தாலும். புகைப்படங்களை பார்க்கும் சந்தோஷமே தனி. புகைப்படம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது.அந்த வகையில் உடனடியாக பிரிண்ட் போட்டுத் தரும் கேமராவும் பரிசளிக்க சிறந்த பொருள்தான்.

பாதுகாப்பு கருவி

பெண்கள் அழகை மேம்படுத்த மட்டுமின்றி அவர்களை பாதுகாக்க உதவும் கருவிகளுள் இதுவும் ஒன்று. தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்புகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இதில் உள்ள பாதுகாப்பு பொத்தானை அழுத்தினால் அது உடனடியாக செய்தியை பாதுகாவலருக்கு அனுப்பும்.

பெண்களை பாதுகாக்க நினைப்பவர்கள் அவசியம் வாங்கி பரிசளிக்க வேண்டிய சாதனங்களுள் மிகவும் முக்கியமானது இது. இவற்றை, வாங்கி அளிப்பது நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அக்கறையை வெளிப்படுத்த உதவும்.