ஐதராபாத் மாநிலத்தில் செல்போனை தாய் பறித்துக்கொண்டதால் ஆத்திரத்தில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலம் வட்டினாகுலப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி சுருதி (20).
நேற்று நீண்ட நேரமாக சுருதி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அவருடைய தாய் செல்போனை பறித்துக்கொண்டு யாருடன் பேசுக்கொண்டிருக்கிறாய் எனக்கேட்டு திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுருதி வீட்டில் ஆள் இல்லாத சமயம், உடல்முழுவதும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்துள்ளார்.
கூச்சலிட்டவாறே தீயுடன் ஓடிவந்த சுருதியை மீட்க அக்கம்பக்கத்தினர் போராடி பார்த்தனர். ஆனால் தீ உடல்முழுவதும் வேகமாக பரவியதால் அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சுருதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.