காதலனுடன் தனிமையில் இருந்த விதவை பெண்.. சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை

தமிழகத்தில் ஆண் நண்பரின் பணப் பிரச்சினைக்காக நகையை கழற்றி கொடுத்துவிட்டு, மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக விதவைப் பெண் ஒருவர் நாடகமாடியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் அருகில் உள்ள சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். விதவையான இவரும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த செளந்தரராஜன் என்பவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தருமபுரி நகர காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரில் தனது ஐந்தரை சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார்.

விசாரணை மேற்கொண்ட பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண் மஞ்சள் கயிற்றை வாங்கி கழுத்தில் கட்டிக்கொள்வது தெரியவந்தது.

இதையடுத்து, தங்கள் பாணியில் விசாரித்த போது, தானும் தனது ஆண் நண்பர் செளந்தரராஜனும், ஹொட்ட்லில் ரூம் எடுத்து தனிமையில் தங்கியதாகவும் அப்போது, தனது நண்பருக்கு இருந்த பணப் பிரச்சினையால், தனது சங்கிலியை கழற்றிக் கொடுத்துவிட்டு நாடகமாடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.