சிறிலங்கா ஜனாதிபதியுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச ஒக்டோபர் 26 ஆம்திகதி மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது போனதால் அவர் பின்வாங்கியுள்ளநிலையில் கோட்டாபய ராஜபக்சவை அரசியல் களத்தில் இறக்கிவிடும் முயற்சிகள்தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதற்கு சிறிலங்காவில் கடந்த ஐம்பது நாட்களாக நிலவிய மிகவும் மோசமானஅரசியல் குழப்பங்களுக்கு பிரதான காரண கர்த்தாவாக கருதப்படும் சிறிலங்காவின் அரசதலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முழமையான ஆசீர்வாதமும்கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இருக்கும் கோட்டா விசுவாசிகள்தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவைகளமிறக்கி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான செயற்திட்டமொன்றையும் கோட்டா விசுவாசிகள்டிசெம்பர் 14 ஆம் திகதியான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு முதலே ஆரம்பித்திருக்கின்றனர்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்சவின்ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிவரும் விளம்பர நிறுவன முகாமையாளரான மிலிந்த ராஜபக்ச, கோட்டாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துமாறு பொதுமக்கள்தரப்பிலிருந்து அழுத்தங்கள் விடுக்கப்படும் வகையிலான பிரசாரங்களை சமூக வலைத்தளங்களைமையப்படுத்தி ஆரம்பித்திருக்கின்றார்.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பராககருதப்படும் சிறிலங்காவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திலீத் ஜயவீர நடத்தும் “இரிதாஅருண” என்ற வாராந்த பத்திரிகையின் இந்தவார வெளியீட்டில் “கோட்டா ஜனாதிபதிவேட்பாளராக போட்டியிடுவதற்கு மைத்ரி விருப்பம்” என்று தலைப்பிட்டு பிரதானதலைப்புச் செய்தியாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
“இரிதா அருண” பத்திரிகையின் தலைமை ஆசிரியராக மஹிந்த – கோட்டா ஆகியோரின்விசுவாசியான மஹிந்த இலயப்பெருமவே கடமையாற்றி வருகின்றார். இவர் மஹிந்த ராஜபக்சவின்ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பதுஇங்கு சுட்டிக்காட்டத்தக்கது.