மனம் நொந்து போன காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

மதுரையில் இளம்காதல் ஜோடியினர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியை சேர்ந்த நாகராஜ் (24), மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மதுரை சமயநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தினி (23), மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனம் நொந்து போன காதல் ஜோடியினர், நாகராஜ் தங்கியிருந்த உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஆளில்லாத நேரம் பார்த்து இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், விஷம் குடித்து தரையில் கிடந்த நந்தினியையும், தூக்கில் தொங்கியவாறு கிடந்த நாகராஜின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.