திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணி (50). இவர் கடந்த 10ம் தேதி இரவு ரோந்து சென்றபோது இரவு 10.30 மணிக்கு சோமரசம்பேட்டை ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு கணினி பிரிவில் பெண் காவலர் சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கு விவரங்களை பதிந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணி, ”பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குளிர் தாங்க முடியவில்லை” என பேச்சை தொடங்கி, திடீரென பெண் போலீஸ் கன்னத்தில் முத்தமிட்டு கட்டி அணைத்தார். இதை எதிர்பார்த்து காத்திருந்தவர் போல, சுந்தரியும் பாலசுப்பிரமணி வசம் ஆகி, உற்சாகமாக உல்லாசத்தில் திளைத்தார். ஸ்டேஷனிலேயே இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு உளவுத்துறை போலீஸ் ஒருவர் தற்செயலாக வந்திருக்கிறார். இதை கண்டதும் பதறிய பெண் போலீஸ், தன்னை காப்பாற்ற மின்னல் வேகத்தில் திட்டமிட்டு, எஸ்.எஸ்.ஐ.தான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறி அழுகை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். உடனே, போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அசிங்கத்தை மேலிடத்துக்கு உளவுத்துறை காவலர் தெரிவித்துள்ளார். மறுநாள் பெண் போலீஸ், மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக்கிடம் எஸ்.எஸ்.ஐ மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். அவர் விசாரணை எதுவும் நடத்தாமல் எஸ்.எஸ்.ஐ.யை சஸ்பெண்ட் செய்தார். பின்னர், டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனை விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி, காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை டிஎஸ்டிபி ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று பாலசுப்பிரமணி இரவு 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பெண் போலீஸ் அருகில் சென்று கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு, அவரிடம் பேச்சு கொடுக்கிறார். சில நொடிகளில் இருவரும் முத்தம் கொடுக்கின்றனர். இவ்வாறு 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடும் வீடியோவில் பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல், பாலசுப்பிரமணி செய்கைகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பெண் போலீசிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய இந்த அசிங்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.