வத்சபூர் மாவட்டத்தில் உள்ள வத்சர் பஞ்சாயத்துக்கு ஒன்றிய ஓரென்பர்க்கில் நேற்று மொபைல் போன் சார்ஜ் செய்த பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களையும், பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ராக்பாய் மற்றும் ரங்காவின் மகள் அர்ச்சனா வயது 20, தந்தையுடன் விவசாய வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். அருகில் உள்ள பள்ளியில் அர்ச்சனாவும் அவரின் தாயாரும் சமையல் வேலை பார்த்துவருகின்றனர்.
பள்ளியிலிருந்து மத்திய உணவிற்குப் பின் வீட்டிற்குச் சென்ற அர்ச்சனா, அவரின் வீட்டில் சார்ஜ் போடப்பட்ட மொபைல் போன்னை கையில் எடுத்தவுடன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவரின் தாய், அர்ச்சனா அசைவில்லாமல் தரையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். அர்ச்சனா மின்சாரம் தாக்கி இறந்ததற்கு அவரின் வீட்டின் அருகிலிருந்த ட்ரான்ஸபார்மறில் ஏற்பட்ட பழு தான் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.
மின்னழுத்தத்தினால் ஏற்பட்ட மாற்றத்தினால் மின்சாரம் தாக்கி இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது. மொபைல் போன்களை சார்ஜ் போட்டு பயன்படுத்தும் முறையை மக்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம் என்பதை மக்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.