பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவைச் சத்தியப்பிரமாணம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறுவதற்குச் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவாகவே நடக்கவேண்டிய இந்த சத்தியப்பிரமாணம் அமைச்சர்களைப் பட்டியலிடும் செயற்பாட்டால் தாமதமாவதாக கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பட்டியல் ஜனாதிபதியின் ஆலோசனைப்படியே நடக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்லதால் அதற்கு ஜனாதிபதியிடம் நேரகாலம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.