ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். பின்னர், ஆஸ்திரேலியா அணி 326 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் இருந்து அதிகபட்சமாக ஹாரிஸ் 70 ரன்கள் எடுத்தார்., இந்திய அணியில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும், ஹனுமான் விஹாரி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர், முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, சிறப்பாக விளையாடி தனது 25 வைத்து சதத்தை அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்தார்.ஆஸ்திரேலியா அணி தரப்பில் இருந்து நாதன் லியான் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணி 198 ரன்கள் எடுத்து 7 விக்கெட் இழந்துள்ளது. இதன் மூலம் 241 ரன்கள் முன்னிலை பெற்று வருகிறது.
முன்னதாக, இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வந்த ஆரோன் பின்ச் 25 ரன்கள் எடுத்தபோது, சமி வீசிய பந்து அவரின் வலது ஆள் காட்டி விரலில் பலமாக தாக்க, அவருக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டது.
இதையடுத்து ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். மேலும், முதலில் இந்திய கேட்பன் விராட் கோலியின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பும்ரா வீசிய பந்து ஆஸ்திரேலிய வீரர் ஹாரிஸ், ஹெல்மெட்டை பதம் பார்த்தது.
இந்நிலையில், பெர்த் ஆடுகளம் தனது கோர முகத்தை நேற்று காட்ட துவங்கியது. வழக்கத்தை விட இன்று பந்து அதிகமாகவே எகிறியதுதான் இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. இந்த மைதானம் வேக பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக உருவாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அணி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.