அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாவூர் கிராமத்தை சார்ந்தவர் மணிகண்டன். இவர் விவசாயியாக பணிசெய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சுகன்யா. இவருக்கு சொந்தமான விளைநிலத்தில் இவரும் இவரது மனைவியும் விவசாய பணி செய்வது வழக்கம்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று கணவன் மனைவி இருவரும் அவர்களின் வயலில் பணியாற்ற சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு சமயத்திற்கு மேலாக இந்த வாக்குவாதம் அதிகரிக்கவே., சுகன்யாவை அடித்து கொலை செய்துள்ளார்.
சுகன்யாவை அடித்து கொலை செய்துவிட்டு., கணவர் மணிகண்டனும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார். இதனை கண்ட அங்குள்ள மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை குடும்பத்தகராறில் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.