கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழாவுக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ வந்த பெண் காங்கிரஸ் துணை அமைப்பாளர், பெண் காவல் உதவி ஆய்வாளரை கீழ்த்தரமாக பேசிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ வில் கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் பெண் துணை அமைப்பாளர் வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் தடுத்து, ‘மேடம், கூட்டம் அதிகமாக உள்ளதால் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளனர். கொஞ்ச நேரம் கழித்து உங்களை உள்ளே விடுகிறேன்’ என்று பெண் உதவி ஆய்வாளர் கூறியுள்ளார்.
அப்போது கோபம் அடைந்த காங்கிரஸ் துணை அமைப்பாளர் பெண் உதவி ஆய்வாளரை கீழ்த்தரமாக பேசியது மட்டுமின்றி, வாடி போடி என்று அசிங்கமாக திட்டியுள்ளார். அத்துடன், ‘காவல்துறை அராஜகம் என்னிடம் வேண்டாம். இதையெல்லாம் முன்னாள் ஜெயலலிதா, சசிகலாவிடமே பார்த்து விட்டேன்’ என்று போலீசை திட்டும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. காங்கிரஸ் துணை அமைப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் முன்வருவர வேண்டும் என சமூக ஆரவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.