அம்பாறை – பெரியநீலாவணை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எலும்பு பிரபல முறிவு வைத்தியர் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பெரியநீலாவணையில் எலும்பு முறிவு வைத்தியராக சேவையாற்றும் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த 68 வயதான செல்லத்தம்பி நமசிவாயம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அவருடன் பயணித்த இரட்டைச் சகோதர்களான 7 வயதுடைய வி.தேமீஜன் வி.வேணுஜன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் பெரியநீலாவணையில் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கனரகவாகனச் சாரதியை பொதுமக்கள் விரட்டிப்பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தை முற்றுகையிட்டு சோதனை செய்தபோது வாகனத்தில் இருந்த சிறிதளவு கஞ்சாவை மீட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.