அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து!

மும்பையின் அந்தேரியில் உள்ள அரசு மருத்துவமனையில், மூன்றாவது மாடியில் மாலை 4:30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டதும், தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நோயாளிகளை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.

ஆனால் அதற்குள் தீ நான்காவது தளத்திற்கு பரவியது.மேலும் தீ விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர் எனவும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி மருத்துவமனையின் உள்ளே அதிகமான நோயாளிகள் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அங்கு மருத்துவமனை முழுவதும் தீ பரவி மொத்த கட்டிடமும் புகையால் மூடியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.