நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று கணவன் தற்கொலை முயற்சி

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து கொன்ற, கணவன், தானும் உயிரை போக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலுார் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தைச் சேந்தவர் மணிகண்டன்(28). இவர் மனைவி சுகன்யா(25). இவர்களுக்கு அய்யப்பன்(6), மதுஸ்ரீ(3) என்ற இரண்டு குழந்தைகள்.

விவசாய தொழில் செய்து வரும் மணிகண்டன், தன் மனைவி சுகன்யா நடத்தையில் சந்தேகப்பட்டு, நேற்று மாலை, வயலில் வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்தார்.

இதனைத்தொடர்ந்து மணிகண்டன் தானும் விஷம் குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உடனடியாக  வெங்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்து, நடந்த கொடுஞ்செயல் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, வெங்கனுார் போலீசார், மணிகண்டனை சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சுகன்யா உடலை மீட்டு பிரேத ப்பரிசோதனைக்காக அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.