உற்சாக கொண்டாட்டத்தில் இந்தியாவின் கடவுள்கள்!!

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநிலங்களை கைப்பற்றியது.

தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்கிறார். மிசோராம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைய செய்து அம்ம்மாநில கட்சியான மிசோ கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலயில், இன்று ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேஷ் மாநிலங்களில் காங்கிரசை சேர்ந்த முதலமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில், மத்திய பிரதேச மாநிலத்திற்கு கமல்நாத் இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கமல்நாத் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட உடன் முதல் கோப்பில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார். முன்னதாக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதாக என அறிவித்திருந்தார். சொன்னது போலவே முதல் கையெழுத்தை இட்டு இருப்பது அம்மாநில விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.