உடம்பிற்கு பயனளிக்க கூடிய பழங்களில் கிவிப்பழமும் ஒன்றாகும். இது உடம்பிற்க மட்டுமின்றி முக அழகிற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் மாற்றுகிறது.
நாம் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பதை விட இயற்கையான இந்த பழங்களை பூசுவதன் மூலம் நம் அழகை தக்க வைத்து கொள்ள முடியும் இதனற்கான சிறந்த வழிமுறைகளை நாம் கீழே காண்போம்.
பருக்களை ஒழிக்க
முகத்தின் அழகை பராமரிக்க இந்த குறிப்பு நன்கு உதவும். குறிப்பாக பருக்களை அழிக்கவும், இவை வராமல் தடுக்கவும் இந்த முகப்பூச்சு உதவும்.
தேவையானவை
- கிவி பழம் 1
- எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை
முகத்தின் பருக்களை ஒழிக்க, முதலில் கிவி பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவவும்.
20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம். இந்த குறிப்பு பருக்களை சரி செய்யவும், இனி பருக்கள் வராமல் தடுக்கவும் உதவும்.
கருவளையங்களை போக்க
கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் நமது முகத்தையை கெடுத்துவிடுகின்றது. அதற்கு கிவி பழம் சிறந்தது. இதனை தடுக்க இவ்வாறு செய்யுங்கள்.
தேவையானவை
- கிவி பழம்
செய்முறை
கிவி பழத்தை ஒரு துண்டு அரிந்து கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை எளிதில் போக்கி விடலாம்.
சுருக்கங்களை குறைக்க
சுருக்கங்கள் நமது முகத்தின் இளமையை முழுமையாக மாறுதல் செய்து விடும். இதனை தடுக்க இவ்வாறு செய்யுங்கள்.
தேவையானவை
- கிவி பழம்
- பாதாம் 8
- கடலை மாவு 1 ஸ்பூன்
செய்முறை
இரவு முழுவதும் ஊற வாய்த்த பாதாமை, கிவி பழத்தோடு நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கடலை மாவை சேர்த்து கொண்டு முகத்தில் தடவவும்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எளிதில் போய் விடும்.
சரும பொலிவிற்கு
உங்கள் முகப் பொலிவிற்கு சிறந்த ஒன்றாகும். கிவியில் உள்ள லாக்டிக் அமிலம் இயற்கையாகவே உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது
தேவையானவை
- கிவி
- யோகார்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் ஆயில்
செய்முறை
பாதி கிவி பழத்தை எடுத்து நன்றாக பேஸ்ட் மாதிரி பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் யோகார்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.