நாடாளுமன்றத்தை ரணகளமாக்கிய சுமந்திரன்….

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அமைச்சரவையின் பிரதானியாகும். அப்படி என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எப்படி எதிர்கட்சியாகும் என அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியை விட்டு விலகி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சி ஒன்றில் உத்தியோகபூர்வமாக இணைந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வாறு உரிமை பெற முடியும். இது இரண்டும் எனது கேள்விகளாகும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாதென்பதனை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும் என சுமந்திரன் கூறியுள்ளார்.

சுமந்திரனின் வாதத்தினை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், அது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆராய்ந்த பின்னர் முடிவு வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துளளார்