பட்டம் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா.. மகள் வயது பெண்ணிடம் பேராசிரியர் காட்டிய வெறி..?

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வு மாணவி ஒருவரை துறைத் தலைவர் முனைவர் கர்ணமகாராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தொடர்பாக அம் மாணவி காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளிடம் டிசம்பர் 8 ஆம் தேதி புகார் மனு கொடுத்துள்ளார்.

மாணவி கொடுத்த புகாரில் அடிப்படை ஆதாரம் இருப்பதால் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் கர்ணமகாராஜன், விசாரணைக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பதற்கு ஏதுவாக அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் பல்கலைக்கழக மானியக் குழு (உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பாக குறைகள் தீர்ப்பது தடுப்பது தடைசெய்வது) ஒழுங்காற்று குழு செயல் முறைகள் 2015 -ன் படி உள் புகார் குழு காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவில்லை.

எனவே உள் புகார் குழு பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒழுங்காற்று விதிமுறைகளின்படி மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.