ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் கட்டண பாக்கி குறித்த விவரங்களை அந்த மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் படி, ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத் துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
உணவு – 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவு – 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாய்
பிசியோதெரபி சிகிச்சை – 1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாய்
அறை வாடகை – 24 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்
பொதுவான அறை வாடகை – 1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 100 ரூபாய்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி காசோலையாக 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு, 2017ஆம் ஆண்டு ஜூன் 15 ம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக 6 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டுள்ளது.
எனவே அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த மருத்துவ செலவான, 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாயில், 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
கட்டண பாக்கியாக, 44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாய் இன்னும் தர வேண்டியுள்ளது என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.