ரணிலுக்கு அமெரிக்கா கொடுத்த இன்ப அதிர்ச்சி….!!

இலங்கையின் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் றொபேர்ட் பல்லாடினோ நேற்றுமுன்தினம் வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

‘கடந்த கடந்த மாதங்களில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு, அரசியலமைப்பு நெறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட வகையில் தீர்வு கண்டமைக்காக சிறிலங்காவின் அரசியல் தலைமையை நாங்கள் பாராட்டுகிறோம்.இந்தோ- பசுபிக்கின் மிகப் பெறுமதியான பங்காளராக இலங்கை இருக்கின்றது.

மேலதிக ஒத்துழைப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருதரப்பு விவகாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், அவரது அமைச்சரவையுடனும் இணைந்து முன்நோக்கிச் செயற்படுவதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.