சுவையான பன்னீர் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 200 கிராம்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி – 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்துமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
அரைக்கும் பொருள்:
தேங்காய்த் துருவல் – கால் கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
கொத்துமல்லி இலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
சோம்பு – 1 தேக்கரண்டி
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – 1
பட்டை – சிறிய துண்டு
முந்திரி பருப்பு – 10
செய்முறை :
* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பன்னீரை சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
* ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம் மூடிப் போட்டு வதக்கவும்.
* வாணலியின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.
* பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
* குருமா நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
* கடைசியாக சிறிது கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.
* கொத்துமல்லி இலை தூவினால் பன்னீர் குருமா ரெடி.