மதுரை மாவட்டத்தில் இருக்கும் பாலமேடு பகுதியை சார்ந்த 14 வயது சிறுமி., அந்த பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சிறுமியின் தந்தை அங்குள்ள பகுதியில் கடை நடத்தி வருகிறார்.
சிறுமி அவ்வப்போது தந்தையின் கடைக்கு செல்வது வழக்கம்., அந்த வகையில் சம்பவத்தன்று சிறுமி தந்தையின் கடைக்கு சென்றார். அப்போது சிறுமியின் தந்தை கடையில் இல்லாததால்., சிறுமி கடையில் தனியாக இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த அலங்காநல்லுர் பகுதியை சார்ந்த ராம்குமார் (வயது 32) என்பவர் சிறுமியிடம் பேச்சு கொடுத்து., சிறுமியை தனிமையில் அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியை தனிமையில் அழைத்து சென்ற ராம்குமார் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனக்கு நடந்த கொடுமையை தாயிடம் கண்ணீருடன் கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார்., சம்பவம் குறித்து சமயநல்லூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு ராம்குமாரை கைது செய்தனர்.