உடுமலைபேட்டையை சேர்ந்த ஷங்கர் என்பவரை, கடந்த 2016ம் ஆண்டு கவுசல்யா தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் உறவினர்களிடத்தில் பெற்றோருக்கு மரியாதை இல்லை என கவுசல்யாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கவுசல்யாவின் கணவர் சங்கரை வெட்டிக் கொன்றுள்ளனர். கவுசல்யாவையும் வெட்டியுள்ளனர்.
ஆனால், அவர் படுகாயங்களுடன் உயிர்த்தப்பிய கவுசல்யா பின்னர் கனவரை இழந்ததனால் அவரது கொலைக்கு காரணமான தனது உறவினர் மற்றும் தந்தைக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார். இதன் பின்னர், கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு கோஷங்களை கையிலெடுத்த கவுசல்யா தற்பொழுது சக்தி என்பவரை மறுமணம் புரிந்துள்ளார்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் சொந்த ஊரான குமாரலிங்கத்தில் சிலர் கவுசல்யாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தும் , அவரது செயல்பாடுகளை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியும் உள்ளனர். இது ஷங்கரின் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
அந்த தீர்மானமானது, “கவுசல்யா வீட்டில் வெளியாட்கள் யாரும் வந்து தங்க காவல்துறை அனுமதியளிக்கக்கூடாது. சங்கரின் இரத்தம் காய்வதற்குள் கவுசல்யா திருமணம் செய்துள்ளதாகவும், கவுசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சங்கரின் பெயரை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இனி தொடரக்கூடாது” என்ற அடிப்படையில் உள்ளது.