இந்திய அணி வீரர்களுக்கிடையில் ஆஸ்திரேலியாவில் வெடித்த மோதல்.!

பெர்த் டெஸ்டின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா வீசிய பந்து நாதன் லியோனின் காதைப் பதம் பார்த்தது.

அப்போது ரவிந்திர ஜடேஜா இஷாந்த் சர்மா ஆகியோருக்கு திடீரென வார்த்தை மோதல் ஏற்பட்டு இருவரும் ஆக்ரோஷமாக மோதத் தயாராகினர்.

பிரச்சனை பெரிதாக முளைக்கும் தருணத்தில் முகமது ஷமி ஓடி வந்து இருவரையும் பிரித்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.

இஷாந்த் சர்மா,ரவிந்திர ஜடேஜா சண்டையிட்ட காட்சிகள் அனைத்தையும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்டு’ என்ற நாளேடு இந்திய அணி வீரர்களுக்கு இடையே ஒற்றுமை குறைந்துவிட்டதா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்குரிய ஆதாரமாகத் தனது பதின்ம பதிப்பிலும்,டுவிட்டர் பக்கத்திலும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெர்த் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டபோதிலும் ஆடும் லெவனில் களமிறக்கவில்லை.அவர் மாற்றுவீரராக களமிறங்கி பீல்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்:

விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பார்தீவ் படேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜாஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால்.பெர்த் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்ததால் இந்திய அணியின் ஆடும் லெவனில் பலத்த மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.