ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் மட்டுமன்றி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
52 நாட்கள் நீடித்த அதிகார மோதலுக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
இதன்போது உரையாற்றிய மைத்திரி, ரணிலை கடுமையாக திட்டியதாக தகவல்கள் வெளியாகி இருந்து.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மைத்திரியின் கடுமையான சொற்களை தாங்கிக் கொள்ள முடியாத ரணிலின் முகப் பாவனை மிகவும் பரிதாபகரமாக இருந்ததாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ரணிலின் மனைவி மைத்திரி அருகில் இருக்கும் போதே, ஜனாதிபதி மைத்திரி படுகேவலமாக திட்டித் தீர்த்ததாக தெரிய வருகிறது.
கடந்த மூன்றரை வருடங்களில் ரணில் செய்த தவறுகளை இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டி திட்டியுள்ளார்.