இலங்கை தொடருந்துத் திணைக்களத்தால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த புதிய தொடருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் தனது சேவையை ஆரம்பிக்கின்றது.
S13 எனும் பெயர்குறித்த மேற்படி தொடருந்து கான்கேசந்துறை-கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக இடம்பெறவுள்ளதாகவும் வழமையாக உத்தரதேவி சேவையில் ஈடுபட்டுவரும் சிவப்பு நிற தொடருந்து, வேறு மார்க்கத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தொடருந்து வெள்ளோட்டப் பயணமாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.