இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம். தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என கணக்கிட முடியாத அளவிற்கு அரசியல் கட்சிகள் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள பெண்களுக்காக, பெண்கள் மட்டுமே உள்ள புதிய கட்சி ஒன்று, இன்று உதயமாகியுள்ளது.
அமெரிக்க நாட்டில் பெண்களுக்கு மட்டும் தனியாக ஒரு கட்சி செயல்பட்டு வருகிறது, அது போல இன்று இந்தியாவின் தலைநகரில் பெண்கள் மட்டும் உள்ள ஒரு தேசிய கட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு பெயர் ”தேசிய பெண்கள் கட்சி”.
36 வயதான பெண் மருத்துவரும், சமூக ஆர்வலருமான ஸ்வேதா ஷெட்டி, இக்கட்சியை தொடங்கி உள்ளார். கட்சி தலைவரம் அவரே தான். இதுகுறித்து ஸ்வேதா ஷெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமெரிக்காவில் ஒரு பெண்கள் கட்சி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதை பின்பற்றி இக்கட்சியை தொடங்கி உள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், ”மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு பெற்றுத்தருவதும் கட்சியின் நோக்கம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.