விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர்கள்.!!

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத்தேர்தலின் வாக்கு என்நாக்கை கடந்த 11 ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்னிக்கை முடிவில், சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநிலங்களை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்கிறார். மிசோராம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைய செய்து அம்மாநில கட்சியான மிசோ கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

மத்திய பிரதேசம்

இதனையடுத்து, இரண்டு தினங்களுக்கு முன் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேஷ் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில், மத்திய பிரதேச மாநிலத்திற்கு கமல்நாத் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கமல்நாத் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட உடன் தனது முதல் கோப்பில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்.

சத்தீஸ்கர்

இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் பதவி ஏற்று கொண்டார். பதவியேற்ற 6 மணி நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.6,100 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 என நிர்ணயித்தும் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் பதவியேற்றுக் கொண்டனர். அசோக் கெலாட்க்கு ராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றவுடன் விவசாய கடன்களை ரத்து செய்ய உள்ளதாக உறுதியளித்தார்.

ராஜஸ்தான்

இந்நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அம்மாநிலத்தின் உள்ள விவசாயிகளின் ரூ.18,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.