இன்று மாலை கையெழுத்தான உத்தரவு..? பிரதமர் மோடியின் அதிரடி வியூகம்.!

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி மற்றும் பா.ஜ.கவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

மொத்தம் 87 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை.

28 இடங்களை கைப்பற்றிய மக்கள் ஜனநாயகக் கட்சியும், 25 இடங்களை வென்ற பாரதிய ஜனதாவும் கூட்டணி சேர்ந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

கடந்த ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீர் பி.டி.பி கூட்டணி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதனை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவித்தார்.இதனையடுத்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி பதவி விலகினார்.

இதனால் அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி தற்போதுவரை அமலில் உள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தும் உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவந்த ஆளுநர் ஆட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று இன்று நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் பிரகடனத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாலை கையொப்பமிட்டதை தொடர்ந்து நள்ளிரவு முதல் அடுத்த ஆறுமாத காலம்வரை அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்.