பொன்சேகாவுக்கு ஆப்பு வைத்த மைத்திரி?

ஐக்கிய தேசியக் கட்சி அனுப்பி வைத்துள்ள அமைச்சர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலரின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரத் பொன்சேகா, பாலித்த ரங்கே பண்டார, விஜித் விஜிதமுனி சொய்ஸா, லக்ஷ்மன் செனவிரத்ன, பௌசி, பியசேன கமகே ஆகியோரின் பெயரை ஜனாதிபதி நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் அண்மை காலமாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சரவையை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் சில அரசியல் குழப்பங்கள் காரணமாக கால தாமதம் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், நாளை காலை புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அனுப்பி வைத்துள்ள அமைச்சர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலரின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ஊடக அமைச்சின் கீழ் வரும் அரச ஊடக நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்களை ஜனாதிபதியே நியமனம் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இம்முறை அமைச்சு பதவி எதனையும் வழங்க போவதில்லை ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.