தனது காதலருடன் ஜோடி சேரும் ஜூலி, புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனது சர்ச்சைக்குரிய முழக்கங்களால் பிரபலமானவர் ஜூலி. அதைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் முதல் சீனில் கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தார்.இருப்பினும் அவர் தொகுப்பாளினி, திரைப்பட நடிகை என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் ஜூலி அனிதா எம்பிபிஎஸ், அம்மன் தாயே, உத்தமி ஆகிய மூன்று படங்களில் நடித்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜுலியின் காதலர் மார்க் ஹம்ரான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஜூலி நடிக்கவுள்ளார். இந்த படத்தை எழில்துரை என்பவர் இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே ‘செஞ்சிட்டாளே என் காதலை’ என்ற படத்தை இயக்கி நடித்தவர்.

நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்ததாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.