திருமணம் நடப்பதற்கு முன்பாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக அபிராமி பணியாற்றி வந்துள்ளார். அதே ஹோட்டலில் கடலூரைச் சேர்ந்த விஜய் வேலைபார்த்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிறகு இருவீட்டினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வரவேற்பாளராக அபிராமி பணியாற்றியதால் முக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். திருமணதிற்கு பிறகும் அடிக்கடி அழகு நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
தனக்கு தனியார் நிறுவனத்தில் பனிச்சுமை இருந்த போதிலும், வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விஜய் வெளியில் செல்வது வழக்கம். அப்போது, பிரியாணி கடைக்குச் செல்வார். அந்தக் கடையில் சுந்தரம் என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருக்கும் அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே இருவருக்கும் சந்திப்பு அதிகமாகி கள்ளக்காதல் நிலைக்கு சென்றுள்ளது.
அபிராமிக்குள் இருந்த மேக்-அப் பழக்கமும், ஹோட்டலில் பணி புரிந்த காரணத்தினால் மனதில் உருவான நவநாகரீக மோகமே, திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு அவரது வாழ்வை திசைமாற்றி கள்ளக்காதலன் சுந்தரமுடன் வாழவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தனது குழந்தைகள் இடையூறாக இருப்பார்கள் என எண்ணி தன் இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். இந்த சம்பவம் நாடும் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். இதனை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவர்க்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கள்ளக்காதலில் மோகம் கொண்டு பிள்ளைகளை கொன்றது அபிராமி மட்டும் அல்ல., அதன் பின் பல கள்ளக்காதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தனிமனித ஒழுக்கம் என்பதனை அனைவரும் கடைபிடித்தால் மட்டுமே உண்டு.