-
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப் பாட்டிற் குள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக் கும். வியாபாரத்தில் வேலை யாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப் படும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனை விக்குள் வீண் விவாதங்கள் வந்துப்போகும். உடல் நலம் பாதிக்கும். தாழ்வுமனப் பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
கடகம்
கடகம்: உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டு மென்ற முடிவுக்கு வருவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவு வார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கன்னி
கன்னி: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறை மூலம் தீர்வு காண்பீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாய மடைவீர்கள். தெய் வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
-
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: தன்னம்பிக் கையுடன் பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். பிள்ளை கள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
-
தனுசு
தனுசு: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
மகரம்
மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறை வேறும் நாள்.
-
கும்பம்
கும்பம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப் பீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.