ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டமைப்புக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர், “தமது கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாக அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என கூறியிருந்தார்.
நாட்டில் அண்மை காலமாக ஏற்பட்டிருந்து அரசியல் குழப்பங்களின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டமைப்புக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.