மாணவியிடத்தில் 24 வயது காமகொடூரன் அரங்கேற்றிய அட்டூழியம்..? தீவிர சிகிச்சை பிரிவில் போராடும் சோகம்.!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை 6 மணிக்கு அவரது வீட்டுக்கு அருகிலுள்ள வாய்காலில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் என்ற 24 வயதான காமக் கொடுரன் ஊரின் முகப்பில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு, மாணவியை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

அவனிடமிருந்து தப்பிக்க மாணவி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவனை பிடித்து காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, அந்த காமக் கொடூரனை கைது செய்த சேத்தியா தோப்பு மகளிர் காவல்துறையினர், போக்ஸோ சட்டம் 501வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த மதுபான கடையை உடனடியாக மூட வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாகவும் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி மக்களிடத்தில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பரிதவித்து வருகின்றனர்.