ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகம் `காஞ்சனா’ என்ற பெயரில் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, ஓவியா கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருக்கி நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019-ல் ரிலீசாக இருப்பதாக படக்குழு டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.