சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள்.!! மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் இருக்கும் சிருகுப்பா அருகேயுள்ள கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு நேற்று மத்திய உணவு வழங்கப்பட்ட நிலையில்., உணவை சாப்பிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் திடீரென வாந்தி மற்றும் மயக்கத்தில் அவதியுற்றனர்.

இதனை கண்ட ஆசிரியர்கள் மற்றும் விசயத்தை அறிந்த கிராமமக்கள் உடனடியாக மாணவ – மாணவியர்களை டிராக்டர் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவ – மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., எந்த விதமான பிரச்சனையும் இல்லை கவலை பட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் சிறிது நிம்மதியடைந்தனர்.

இந்த பிரச்சனைக்கு உணவு பொருளில் பல்லி விழுந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., மாணவ – மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை உறுதி செய்துவிட்டு பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை போலவே., பாகல்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் உனக்குந்து சிக்கூமாகி கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் நேற்று மதியம் அரிசி சத்தத்துடன் சாம்பார் வழங்கப்பட்டது. இந்த உணவை உண்ட சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் தீடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். இதனை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து., அவர்களை உடனடியாக மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

மருத்துவமனையில் மாணவ – மாணவியர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில்., சுமார் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டு., அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் பள்ளிக்கு சென்று மேற்கொண்ட சோதனையில்., சாம்பாரில் பல்லி கிடந்தது கண்டறியப்பட்டது.

இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மத்திய உணவை சாப்பிட மாணவ – மாணவியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.