இது மட்டும் உண்மை என்றால்… நடிகர் விஷால் ஜெயிலுக்கு போவது உறுதி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்து விட்டதாக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், இது நிரூபிக்கப்பட்டால் அவர் ஜெயிலுக்கு செல்வது உறுதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகரான விஷால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பந்தத்த்தை பார்த்தால், அது சினிமாக்காரர்கள் பிரச்சனை போன்று தெரியவில்லை, இதற்குள்ளும் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் கமலுக்கு முன்னரே அரசியலில் குதித்தவர் தான் நடிகர் விஷால், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட நின்றார். அதன் பின பல காரணங்களால் அவரால் நிற்க முடியவில்லை. அவருக்கு சமூகத்துக்கு ஆதரவான ஓட்டுகள் நிறைய இருப்பதாக கூறப்பட்டதால், இதை அதிமுகவினர் தான் செய்ததாக கூறப்பட்டது.

அதன் பின் விஷால் தமிழ அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சித்து வந்தார். இதனால் விஷாலும்க்கும், அதிமுகவினருக்கும் இடையே பனிப்போர் நிலவியது என்று கூறலாம்.

இதைத் தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவாக ஜெ என்ற செய்தி சேனல் உருவாக்கப்பட்டது. அப்போது விஷால் ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன் என்று காத்திருந்தார்.

இது அதிமுகவினருக்கு கடும் கொந்தளிப்பை கொடுத்தது. அதுமட்டுமின்றி தனியார் சேனல் ஒன்றில் விஷால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், அதுவும் குறிப்பிட்ட சில பேருக்கு பிடிக்கவில்லையாம்.

இப்படி விஷாலுக்கும், ஆளும் தரப்பினருக்கும் இடையே இருந்த வந்த இந்த மோதல் தான் தற்போது கைது வரை வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

என்ன தான் இது சினிமாக்காரர்கள் பிரச்சனையாக இருந்தாலும் உள்ளே அரசியல் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.

தமிழ் தேசிய கட்சிகள் எல்லாம் விஷாலுக்கு எதிராக உள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை சாதாரண ஒன்றாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

அந்த 7 கோடி ரூபாய் கையாடல் மட்டும் என்பது உண்மையிலேயே நிரூபணமாகிவிட்டால், விஷாலுக்கு ஜெயில் கட்டாயம் என்று கூறப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.