மதுரை ஐகோர்ட்டில் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் மற்றும் ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் குட்கா பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்றிருப்பதாக ஒரு பட்டியலே இருப்பதாக கூறினர். இதுகுறித்து, விசாரித்து அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
ஆனால், தற்போது போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் அறையில் இருந்து குட்கா ஊழல் குறித்த ஆவணங்கள் இருப்பதாக வருமான வரித்துறையினரின் அறிக்கையில் கூறப்படுகிறது.
மேலும், இவ்வழக்கில் எதிர் மனுதாரராக சசிகலாவை சேர்த்து அவருக்கும் நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, பின் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து விட்டனர்.