சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மெரினாவில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக நிறைய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்கள் மீன் விற்கவும், மீன் பெருட்களை விற்பனை செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தில் இந்த இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் தமிழக அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. மெரினா கடற்கரை அழகு படுத்தும் திட்டம் என்று இதற்கு பெயர் வைத்துள்ளனர்.
இந்த பகுதியை மீனவர்கள் பல வருடங்களாக இந்த இடத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அவர்களை அப்புறப்படுத்தி அந்த இடத்தை அகலப்படுத்தி, மெரினாவை அழகுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அங்கு அதிவிரைவு சாலை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருவதால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நொச்சிக்குப்பம் மற்றும் அருகாமையில் உள்ள மீனவ பகுதிகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 500 பேருக்கு மேற்பட்டோர் போராட்டம் செய்து வருகிறார்கள்.
போராட்டம் காரணமாக மெரினாவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளது. நிறைய காவலர்கள் குவிக்கப்பட்டதால் மெரினாவில் பரபரப்பு நிலவுகிறது. அந்த பகுதிக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.