மேகன் அணிந்திருந்த ஆடையின் மதிப்பு இத்தனை பவுண்டுகளா!

கிறிஸ்துமஸ் மதிய உணவு நிகழ்ச்சியின்போது பிரித்தானிய இளவரசி மெர்க்கல் அணிந்து வந்திருந்த ஆடை மற்றும் மோதிரம் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் மற்றும் கேட் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களாகவே வந்தந்திகள் பரவிய வண்ணம் உள்ளன.

ஆனால் இதுகுறித்து அரண்மனைக்கு நெருக்கமான ஒரு நபர் பேசுகையில், எந்த பிரிவுகளாக இருந்தாலும், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஒன்றாக இருப்பதை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த வந்ததிகள் ஒருபுறம் பரவி கொண்டிருக்க, ராணியின் அழைப்பை ஏற்று அரச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கென்சிங்டன் அரண்மனையில் கிறிஸ்துமஸ் மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்த போது மெர்க்கல் அணிந்திருந்த ஆடையின் மதிப்பு £1,000 பவுண்டுகளுக்கு அதிகம் எனவும், கையில் அணிந்திருந்த மோதிரத்தின் மதிப்பு £139,000 பவுண்டுகள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் இளவரசி கேட் அணிந்திருந்த ஆடை, அலங்காரங்களின் மொத்த மதிப்பு £305 பவுண்டுகள் மட்டுமே என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

முன்னதாக vouge இதழ் வெளியிட 2018ம் ஆண்டிற்கான சிறந்த ஆடை அணிந்த பெண்கள் பட்டியலில் மேகன் முதலிடம் பிடித்திருந்தது குறிபிடித்தக்கது.