எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது.
பின்னர் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் மறுபடியும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து மீண்டும் மூன்று நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.72.91க்கும், டீசல் விலை லிட்டருக்கு 21காசுகள் குறைந்து ரூ.67.77ஆகவும் விற்கப்படுகிறது.